Pages

Monday, October 24, 2016

இந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்!

இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் திறன் குறைந்து வருவதாக வேலைவாய்ப்பு நிறுவனமான மேன்பவர் குரூப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் தங்கள் விவரங்களை பதிந்து வரும் நிலையிலும் இந்தியாவில் உள்ள 48 சதவிகித நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கேற்ற தகுதியான, திறமையான வேலையாட்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றன. 


உலக அளவில் 40 சதவிகித நிறுவனங்களுக்கு இந்த நிலை இருந்நாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இது எட்டு சதவிகிதம் அதிகமாக உள்ளது. 

ஐ.டி., அக்கவுண்ட் துறைகள்

பெரும்பாலும் ஐ..டி.,, அக்கவுண்ட் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களில் வேலை பார்பவர்களின் திறன் குறைந்து வருவதாக மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. 

உலகம் முழுவதும் 43 நாடுகளில் உள்ள 42,300 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரம் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.