Pages

Monday, October 31, 2016

15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்

கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது. 

ஒருங்கிணைக்க முடிவு:
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 15 ஆயிரம் பள்ளிகளை, 'IT@School' என்ற திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் களஞ்சிய இணையதளமான, 'விக்கிபீடியா'வை போல், 'ஸ்கூல் விக்கி' என்ற பெயரில் இணையதளம் ஏற்படுத்தி, அதில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கவும், மாணவர் - ஆசிரியர் இடையே, தகவல் பரிமாற்றத்துக்கு உதவவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரும் நவ., 1ல், ஸ்கூல் விக்கி இணையதளம் தயாராகிவிடும். இதில், 15 ஆயிரம் பள்ளிகளில், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மலையாளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளி விபரங்கள், பின்னணி குறித்து மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பதிவேற்ற முடியும்.

சிற்றிதழ்:
பள்ளிகளின் கட்டமைப்பு, முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள், பள்ளிகளின் சிற்றிதழ்கள் போன்றவற்றை ஸ்கூல் விக்கியில் இடம்பெறச் செய்யலாம். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த, கல்விக்கு தேவையான விஷயங்கள் ஸ்கூல் விக்கியில் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.