Pages

Tuesday, October 25, 2016

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட்டு தொண்டையில் புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
தேன் கலந்த சுடுநீரை தினமும் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
தேன் கலந்த நீரில் நொதிகள், விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வருவதால், நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
தேன் கலந்த நீரில் உள்ள சத்துக்கள் நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.