புதுக்கோட்டையில் வருகின்ற தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன் கிழமையன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி, பொருளாளர் கே.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கு.சத்தி, மலர்விழி, ரெங்கசாமி, மு.முத்தையா, ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். முதல்வர் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அமுல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.