Pages

Sunday, October 2, 2016

மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

'மழைக்கால விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அனைத்து மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள சுற்றறிக்கை:


மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மழைக்கால விபத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும், நல்ல விபரமான மாணவர்களை, மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டும். வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் பாதையில், நீர்நிலைகள் இருந்தால், அந்த பாதையை தவிர்க்க, அறிவுறுத்த வேண்டும். 

பள்ளிகளில், ஆபத்தான வகையில் எந்த பொருட்களும் இல்லாமல், பார்த்து கொள்ள வேண்டும். மின்கசிவு ஏற்படாமல், மின் உபகரணங்களை சரி செய்வது முக்கியம் பள்ளி வளாகத்தில், நீர் மற்றும் குப்பை தேங்காமல், சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.