Pages

Thursday, October 27, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்களின் பட்டியலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக விவகாரமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பயனாளிகள் :
நாளைய கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு 2016 ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தற்போது உயர்த்தப்பட உள்ள அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் இல்லாமல் 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கேட்டுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.