Pages

Thursday, October 13, 2016

நெட்' தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம்

தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, கல்லுாரி உதவி பேராசிரியராகவும், இளநிலை ஆராய்ச்சி மாணவராகவும் சேர, நெட் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வு,

நாடு முழுவதும், 90 நகரங்களில், 2017 ஜன., 22ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவு, வரும், 17ல் துவங்குகிறது; நவ., 16ல் முடிகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேர, 2017 ஜன., 1ல், 28 வயதை தாண்டியிருக்கக் கூடாது. உதவி பேராசிரியர் பணி தேர்வில் பங்கேற்க, வயது வரம்பு இல்லை என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.