Pages

Friday, September 23, 2016

தனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த முடியாது’!

மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுகள் மட்டுமே கவுன்சிலிங் நடத்த முடியும்; தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், கவுன்சிலிங் நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.


இது தொடர்பாக, ம.பி., அரசு தாக்கல் செய்த வழக்கில், நீதிபதி, ஏ.ஆர்.தவே தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: மருத்துவ கல்விக்கு, நீட் எனப்படும், பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. 

தனியார் மருத்துவ கல்லுாரிகள், பல்கலைகளுக்கும் இது பொருந்தும். நுழைவுத்தேர்வை நடத்துவதுடன், மாணவர்களுக்கான கவுன்சிலிங்கையும், மாநில அரசுகள் மட்டுமே நடத்த முடியும். அதையும் மீறி, தனியார் கல்லுாரிகள், பல்கலைகள் நடத்திய கவுன்சிலிங் செல்லுபடியாகாது.


தனியார் கல்லுாரிகளுக்கான கவுன்சிலிங்கை, வரும், 30ம் தேதிக்குள், மாநில அரசு நடத்திட வேண்டும். இந்த கவுன்சிலிங்கில், தனியார் கல்லுாரி பிரதிநிதிகள் பார்வையாளராக பங்கேற்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.