Pages

Friday, September 23, 2016

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (மே, டிசம்பர்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.