Pages

Thursday, September 8, 2016

ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு

'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கோட்டையில், பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, மனு அளித்தனர்.


இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின்போது கடைபிடிக்கப்படும், 'கிராஸ் மேஜர்' முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரலாறு படித்தவர்களுக்கு மட்டுமே, பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதி போதனை வகுப்புகளை கொண்டு வர வேண்டும்.கடந்த, 1977 முதல், இடைநிலை ஆசிரியர்களாக இருப்போரை, பட்டதாரி ஆசிரியர்
களாக, பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில், மாணவர் நலன் பாதிக்காமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்; தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.