Pages

Thursday, September 1, 2016

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தொந்தரவு: மாறுதல் கேட்டு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மனு

சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுப்பதால், தங்களை பணிமாறுதல் செய்யும்படி, அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன். அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பணிபுரியும், ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை வேறுபள்ளிக்கு மாறுதல் செய்யும்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவருக்கு பிடிக்கவில்லை எனில், அவர்களை பள்ளியை விட்டு, அனுப்பும் வரை ஓய்வதில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவியரிடம்எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, மிரட்டல் விடுக்கிறார்.

ஊரில் உள்ள, சில அரசியல்வாதிகளையும், பெற்றோர் ஆசிரியர்கழகம் என்ற பெயரில், பள்ளிக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். மேலும், 'அடித்து கொன்றுவிடுவோம்' என, மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், ஆசிரியர்களை, நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஏற்கனவே, அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு ஊருக்கு, பலர், மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால், இந்த பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு, ஒன்பது ஆசிரியர்கள் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.