Pages

Wednesday, September 28, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர்.  சம்பள உச்சவரம்பு தளர்த்தப்படும்.  ஊழியர்கள் குறைந்தபட்சமாக ரூ.8400ம், அதிகபட்சமாக ரூ.16,800 ம் போனசாக பெறுவார்கள். இதன் மூலம் 3,67,887 ஊழியர்கள் பயன் பெறுவார்கள். மொத்தம் ரூ.476 கோடியே 71 லட்சம் போனசாக வழங்கப்பட உள்ளது.  மின்துறை, போக்குவரத்துறை, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. வீட்டு வசதித்துறை, சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் கழக ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.