திண்டுக்கல், நான்கு மாதமாக பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என, பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்மாபிரியதர்ஷன் வரவேற்றார். செயலாளர் ஜெகதீஸ்குமார் முன்னிலை வகித்தார்.
சங்கத்தின் நிறுவனர் மாயவன், மாநிலத் தலைவர் பக்தவச்சலம், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா பங்கேற்றனர். 2010 பின்பு பணிமூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் எழுத தேவையில்லை எனவும், அரசு பள்ளி ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத நிர்பந்தம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தல்.
மாவட்டக் கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.