Pages

Thursday, September 8, 2016

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் - அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது. அத்தேர்வை தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலிலியோ அறிவியல் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்க உள்ளோம். ஆகவே இத்தேர்வை பற்றிய விவரங்களை தாங்கள் பிரசுரித்தால் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்தேர்வில் பங்கேற்க.. 
6 முதல் 11 வகுப்பு  வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
50 மாணாக்கர்களுக்கு மேல் பங்கேற்றால் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
தேர்வுக் கட்டணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 50 ரூபாயும் ( குறைந்தபட்சம் 50 மாணாக்கர்கள் ஒரே பள்ளியில் இருந்து பங்கேற்றால் மட்டுமே 50 ரூ கட்டணம்) தனியார் பள்ளிகள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். அதற்கு ஈடாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மூலம் இரண்டு புத்தகங்கள் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்கப்படும்.
தேர்வானது 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும், 9முதல் 11 வரை இரண்டாவது பிரிவாகவும் நடைபெறும்.



தேர்வினால் மாணாக்கர்களுக்கு ஏற்படும் பயன்கள்:
6 முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்கும் மாணாக்கர்களில் தமிழக அளவில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 20 மாணாக்கர்கள் வீதமாக 120 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு இரண்டு நாட்கள் அறிவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெறும் . அதில் இந்திய அளவில் சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் , குழுச் செயல்பாடுகள், வினாடி வினா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்படும். 
அந்த 120 மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் வீதம்  சிறந்த 18 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
அந்த 18 மாணாக்கர்களில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 2 மாணாக்கர்கள் வீதம் 12 பேர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் சார் நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
அந்த நிகழ்வில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களில் ஒவ்வொரு பிரிவில் உள்ள மாணாக்கர்களுக்கும் முதல் பரிசாக ரூ.10000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, இவர்கள் இந்திய அரசின் குடியரசுத் தலைவரால் கெளரவிக்கப்படுவார்கள்


தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 13, 2016
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30. 
இத்தேர்வை தமிழக அளவில் கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைக்கிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு …கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் 9942467764, இ மெயில் kannatnsfudt@gmail.com .தேர்வு பற்றிய விவரங்களை www.vvm.org.in என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.