Pages

Thursday, September 1, 2016

மகப்பேறு விடுமுறை: 9 மாதமாக அதிகரிப்பு

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் மகப்பேறு கால விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது. பெண் ஊழியர்கள் நலனிலும் அரசு அக்கறை செலுத்தி வருகிறது.


கடந்த 2011-ஆம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க மகப்பேறு விடுப்பு காலத்தினை 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன். இதற்கு முன்பு, 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாள்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவெற்றி உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.