Pages

Saturday, September 10, 2016

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’

தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, லேப் - டாப் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு இலவசமாக, இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என, அ.தி.மு.க., அறிவித்தது. 


தற்போது, ஆட்சிக்கு வந்த பின், இலவச இன்டர்நெட் பற்றி முடிவெடுப்பதில், தாமதம் ஏற்பட்டுஉள்ளது. அதனால், லேப் - டாப் கொள்முதல் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

இப்போது, முதலில் லேப் - டாப்களை கொள்முதல் செய்து விடலாம்; அப்புறம், இலவச இன்டர்நெட் இணைப்பு பற்றி யோசிக்கலாம் என, அரசு முடிவெடுத்து உள்ளது.


இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டில், ஐந்து லட்சத்து, 36 ஆயிரம், லேப் - டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; அதற்கான உத்தரவு, வெளியிடப்பட்டு உள்ளது என்றனர். 

ஆனால், இதுவரை, டெண்டர் கோரவில்லை; அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த கல்வியாண்டில், மாணவர்களுக்கு இலவச, லேப் - டாப் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.