Pages

Thursday, September 15, 2016

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடு கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இக்கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை வகித்தார். மாவட்ட நிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின் மீது பொதுமக்கள் கருத்து கூறுவதற்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் விரிவான அளவில் புதிய கல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்.

கல்வியை மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசுகளின் பட்டியலுக்கு மாற்றிடும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு தேசிய மொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு மாநில வரவு, செலவு அறிக்கையில் கல்விக்கு 30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும் 18-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறும் நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.