Pages

Thursday, September 1, 2016

10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'

''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.


தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்று, மொரீஷியஸ்; அங்குள்ள தமிழர்களுக்கு, ஆண்டுதோறும், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடக்கும் பேச்சு போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது; இனி, மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்; இதற்கு, 9.6 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்.

கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில் பிழை திருத்தும் வசதி இருப்பதைப் போல், தமிழிலும், இலக்கணப் பிழையை சுட்டிக்காட்டி திருத்தும், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது; 300 ரூபாய் விலையுடைய அது, முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.