Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 16, 2016

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிப்பு

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்;
    அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    No comments: