Pages

Wednesday, July 6, 2016

மத்திய அரசு ஊழியர் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு

மத்திய அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் சங்க நடவடிக்கை குறித்து விளக்கினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:    மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன், போராட்டம் தொடரும் நிலையில், அவர்களுக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.