Pages

Friday, July 22, 2016

கல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ உதவி: முதல்வர் உத்தரவையடுத்து அமைச்சர் நேரில் பார்வயிட்டார்

கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை வியாழக்கிழமை பார்வையிட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்குகினார் அமைச்சர் விராலிமலை, ஜூலை, 21: புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்குப் போராடும் தங்கள் ஆசிரியரின் மருத்துவச் செலவுக்கு உதவி கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த புதன்கிழமை பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் தனித்தனி கோரிக்கை மனு எழுதி தமிழக முதல்வருக்கு அனுப்பினர், 


இந்த செய்தியை கடந்த ஜூலை, 21-ஆம் தேதி தினமணி, கல்லீரல் பாதிப்பு: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ உதவி கோரி மாணவர்கள் முதல்வருக்கு மனு என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது. இதனையறிந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கருக்கு ஆசிரியரின் நலம் குறித்து விசாரிக்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொத்தமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் ரவிசந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை அழைத்து சிறப்பு சிகிச்சையளிக்க ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.