Pages

Wednesday, July 6, 2016

மதுரையில் ஒன்பது மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையம்!

மதுரையில் ஒன்பது மாவட்டங்களின் பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 22ல் துவங்கி ஜூலை 4 வரை பிளஸ் 2 உடனடி தேர்வுகள் நடந்தன. இதில் பங்கேற்ற மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த மதுரை சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன் முகாம் அதிகாரியாக முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பொறுப்பு ஏற்றுள்ளார். முதன்மை மற்றும் உதவித் தேர்வர்கள் இன்று முதல் (ஜூலை 5) விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். இதற்காக அனைத்து அடிப்படை வசதிகளையும் கல்வித்துறையினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.