Pages

Friday, July 8, 2016

பணி உயர்வு: கல்வித் துறை ஊழியர்கள் கோரிக்கை

பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும் என்று பள்ளி, கல்வித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறை சங்க நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகனிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:


கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் அலுவலகப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், பதிவு எழுத்தர்கள், ஆய்வக உதவியாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும். கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அப்போது, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் உயர்மட்டக் குழுத் தலைவர் எம்.வி.பால்ராஜ், மாநில துணைத் தலைவர் க.குணசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.