Pages

Tuesday, July 19, 2016

ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்த எம்.ஜெபமாலைராஜ் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வேடசந்தூர் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1958-ல் பணியில் சேர்ந்தேன். 1984-இல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.


நத்தம் கோவில்பட்டியில் 1994-இல் ஓய்வு பெற்றேன். ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் எனது ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், எனக்கு ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட்டதில் தவறு நேர்ந்ததாகவும், இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.1,84,124-ஐ ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் சிவகங்கை மாவட்ட கருவூல அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வில்லை.

  ஓய்வூதியம் மாற்றியமைத்தது அரசு தான்.

 அதில் எனது தவறு எதுவும் இல்லை. எனவே எனது ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய கருவூல அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்து எனது ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த ரூ.52,715-ஐ திரும்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு மனுதாரரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து மாவட்ட கருவூல அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.