திருச்சியில், உலக சாதனை என்ற பெயரில், 6 வயது சிறுவனை கால் விரல்களை மடக்கி வலியால் துடித்தபடி நடக்க வைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த பாலாஜி - -அன்னபூரணி தம்பதியின் மகன் சஞ்சய், 6; கேம்பியன் பள்ளியில், 1ம் வகுப்பு படிக்கிறான். இவன் ஏற்கனவே கால் விரல்களை மடக்கியபடி, 60 மீட்டர் நடந்து, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான்.
உற்சாகமாக
சஞ்சய் மீண்டும், 200 மீட்டர் துாரம் கால் விரல்களை மடக்கியபடி நடக்கும் சாதனை நிகழ்ச்சி, கேம்பியன் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. சிறுவனும் உற்சாகமாக கால் விரல்களை மடக்கி நடக்கத் துவங்கினான். 50 மீட்டர் நடந்த பின், முடியவில்லை. இதனால், அழத் துவங்கி நடப்பதை நிறுத்த முயன்றான்.
ஆனால், போட்டியின் நடுவராக இருந்த ஜெட்லீ என்பவர், சிறுவனின் பின்னால் வந்து, வேகமாக நடக்கும்படி சொல்லிக் கொண்டே வந்தார். இதனால், அந்த சிறுவன் வலியால் அழுது கொண்டே, 140 மீட்டர் துாரம் வரை நடந்து, முடியாது என்று நின்று விட்டான்.அப்போது, அவன் கால் விரல்களில் தோல்கள் உரிந்து, ரத்தம் கசிந்தது. இதை பார்த்து, பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இத்தனைக்கும் இந்த சாதனை நிகழ்ச்சி, திருச்சி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மோகன் முன்னிலையில் நடந்தது.
வேடிக்கை பார்த்தார்
சாதனைக்காக, சிறுவனை கட்டாயப்படுத்தி நடக்க வைத்ததை அவரும் வேடிக்கை பார்த்தாரே தவிர, அந்த சிறுவன் கதறி அழும்போதும் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை. இந்த சாதனை விஷயத்தில் சிறுவனுக்கும், அவன் பெற்றோருக்கும் சம்மதம் என்றாலும், அந்த சிறுவன் முடியவில்லை என்றபோதும் துன்புறுத்தப்பட்டுள்ளான். பரிசு வாங்கும்போது கூட, அந்த சிறுவன் அழுதவாறு பரிசு வாங்கியது பார்வையாளர்களை பரிதாபத்தில் ஆழ்த்தியது.தமிழகத்தில் சாதனை என்ற பெயரில், இது போன்று குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இது போன்ற விஷயங்களில் கடுமை காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சாதனை என்ற பெயரில் சிறுவன் துன்புறுத்தப்பட்டிருந்தால் அது குழந்தை உரிமை மீறல் செயல் தான். குழந்தைகளின் திறமைகளை இயற்கையாக வெளிக் கொண்டு வரவேண்டும்; துன்புறுத்தி கொண்டு வருவது வன்முறைக்கு சமம்ஜெயந்திராணி வழக்கறிஞர், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.