மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு கிடையாது என மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆனந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
50 சதவீத மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.