பாகிஸ்தான் தவிர, இலங்கை, ஆப்கானிஸ் தான் உட்பட ஒன்பது நாடுகளின் மாணவர்கள், இந்திய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில், அடுத்த ஆண்டு முதல் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மான ஐ.ஐ.டி.,யில், வெளிநாட்டு மாணவர்கள் படிக்க ஆர்வம் காட்டினர். ஆனால், இதுவரை அதற்கான அனுமதியை வழங்காமல், இந்திய மாணவர்களுக்கே இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஐ.ஐ.டி., நிறுவனத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் வகையில், வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஐ.ஐ.டி., கவுன்சில் உறுப்பினர்களும் அனுமதி அளித்துள்ளனர்.
வரும், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர்க்கப்பட உள்ளனர். இதில், பாகிஸ்தான் மாணவர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. மற்ற பக்கத்து நாடுகளான, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, சிங்கப்பூர், ஐக்கிய அரபு மற்றும் எத்தியோபியா நாடுகளின் மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் இடம் வழங்கப்படும்.
இதற்காக அந்த நாடுகளில், ஐ.ஐ.டி.,க்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள், எந்த சலுகையுமின்றி, ஐ.ஐ.டி.,யில் சேர்க்கப் படுவர். முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். வெளிநாட்டு மாணவர்களுக்கு இடம் வழங்குவதால், இந்திய மாணவர்களுக்கான இடங்கள் குறைக்கப்படாது. இந்திய மாணவர்களுக்கான வசதிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.