Pages

Monday, July 18, 2016

8ம் வகுப்பு படித்தால் 'பிஸியோதெரபிஸ்ட்'

'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு உதவி 'பிஸியோதெரபிஸ்ட்' சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுவதற்கு இயன்முறை மருத்துவ பெருமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் நேற்று இயன்முறை மருத்துவ பெருமன்றம் மாநில தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: மத்திய அரசின் 'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் ௮ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயின்றவர்களுக்கு உதவி 'பிஸியோதெரபிஸ்ட்' சான்றிதழ் பயிற்சி அளித்து வருகிறது. இயன்முறை மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகள் கல்லுாரியில் படித்தவற்றை, இவர்களுக்கு ௪ மாதங்களில் பயிற்றுவிப்பது முடியாத விஷயம்.


மத்திய அரசின் நான்கு மாத கால பயிற்சி சான்றிதழை வைத்துக்கொண்டு தனி 'கிளினிக்' வைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் இயன்முறை மருத்துவம் படித்துவிட்டு ௪௦ ஆயிரம் பேர் உள்ளனர். அரசு, ௪ மாத பயிற்சியின் மூலம் பல உதவி 'பிஸியோதெரபிஸ்ட்களை' உருவாக்குவதால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதோடு மருத்துவத்தின் தரமும் குறையும்.

அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் இயன்முறை மருத்துவர்களின் பணியிடத்தை, 'திறன் இந்தியா' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களை வைத்து நிரப்பும் வாய்ப்பும் இருக்கிறது. மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இயன்முறை மருத்துவர்களின் உரிமைகளை பாதுக்காக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.