Pages

Friday, July 29, 2016

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 'நம்நாட்டில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், ௩௦ சதவீதம் பேர் போலியாக இருக்கலாம்' என, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, பார் கவுன்சிலில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.


உத்தரவு

இதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வழக்கறிஞர்கள் பதிவை, பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும். அதற்காக, கல்வி சான்றிதழ்களை, பார் கவுன்சிலுக்கு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 2015ல், சென்னை உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய பார் கவுன்சிலின் உத்தரவின்படி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பார் கவுன்சிலில், ௮௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், ௧௬ ஆயிரம் பேர், சரிபார்ப்புக்காக அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். ஜூன் மாதத்துக்குள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என, 'கெடு' விதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால், மூன்று மாதங்களுக்கு, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை:தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், பலரது சான்றிதழ் காணாமல் போனதும், பார் கவுன்சில் அனுப்பிய கடிதங்களுக்கு பதில் வராததும் தெரியவந்துள்ளது.போலி சான்றிதழ்கள் அளித்து பதிவு செய்ததும், திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலை பட்டம் பெற்று, அதன்பின் சட்டப் படிப்பு முடித்து பதிவு செய்த விபரங்களும் தெரியவந்துள்ளன.இதன்படி, தற்போது வரை நடந்த சரிபார்ப்பில், ௭,௦௦௦க்கும் மேல் போலிகள் இருப்பதாக, தமிழ்நாடு பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலி வழக்கறிஞர்களை களையெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.