Pages

Monday, July 11, 2016

200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்

தமிழகத்தில் 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் மணிவாசகன் தலைமையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும், பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்கள் தேவை என்ற அடிப்படையில் மேலும் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மொழியாசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு முறையில் உள்ள குறைகள் களையப்பட்டு முறையாக கலந்தாய்வு நடத்த வேண்டும்.

அகில இந்திய நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறவும், கல்வித்திறனை மேம்படுத்திடவும், 80 சதவீதத்திற்கு மேல் அறிதல், புரிந்து கொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல், நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாள்கள் அமைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டலச் செயலர் செல்வம், மாவட்டச் செயலர் தாமரைச்செல்வம், அமைப்புச் செயலர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.