Pages

Tuesday, July 19, 2016

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு தொடங்கியது:ஆக.1 வரை பதிவு செய்ய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் வழங்கப்படுகிறது.


அதைத் தொடர்ந்து தாங்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்புப் பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளய. அதன்படி இந்த வேலைவாய்ப்புப் பதிவு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் முதல் நாளான திங்கள்கிழமையை பதிவு மூப்பு தேதியாகக் கொண்டு வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

மதிப்பெண் சான்று வழங்கப்படும் தினத்தில் மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. முறையில் பயின்ற மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்:ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய்) பதிவு செய்யலாம். மேலும் தங்கள் மாவட்டத்துக்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம் என்றும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.