Pages

Tuesday, June 21, 2016

எம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வளவு?

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு மொத்தம் 68 எம்.பி.பி.எஸ். இடங்கள் திங்கள்கிழமை (ஜூன் 20) ஒதுக்கீடு செய்யப்பட்டன.


சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,250 எம்.பி.பி.எஸ். இடங்களை வகுப்பு வாரியாக நிரப்ப வரும் சனிக்கிழமை (ஜூன் 25) தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடமும் பெற்றோரிடமும் உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட மேலே குறிப்பிட்ட நான்கு சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.)-197 இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.)-158, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) வகுப்பினருக்கு-19, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி)-126, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்சி)-96, தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் (எஸ்சிஏ) வகுப்பினருக்கு (எஸ்சிஏ)-19, பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.)-6 என மொத்தம் 621 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இந்த எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பினருக்கும் உரிய கட்-ஆஃப் மதிப்பெண் மதிப்பிடப்பட்டுள்ளது. ஓ.சி.-198.75; பி.சி.-198.50; பிசிஎம்-197.75; எம்பிசி-197.75; எஸ்சி-194.25; எஸ்டி-193.00

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.