Pages

Friday, June 3, 2016

பி.சி., எம்.பி.சி., வகுப்பினருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் 6% வட்டியில் தொழில் மற்றும் வணிகம் செய்ய கடன் வழங்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், ஆட்சியருமான (பொ) மு. அருணா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் பல்வேறு கடன் உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தொழில் மற்றும் வணிகம் செய்ய கடன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதிகள்: ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ.98,000-ம், நகர்ப்புறங்களில் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். 6% வட்டியில் கடன் வழங்கப்படும்.

கடன் விண்ணப்பத்துடன் சாதிச் சான்று நகல், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை நகல், நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம்(போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.