Pages

Tuesday, June 21, 2016

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு: ஓ.பன்னீர்செல்வம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி, திமுக ஆட்சியில் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியில் சுமார் ஐந்தாயிரத்து 700 கோடி விவசாய தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியின் போது விவசாயக் கடன் தள்ளுபடியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பயனடைந்ததாகக் குற்றம்சாட்டினார். இதனைத்தொடர்ந்து ஐ.பெரியசாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அப்போது அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.