Pages

Wednesday, June 22, 2016

மதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் சேர்க்கை நடைபெறவில்லை

கட்டாயக் கல்விச் சட்டப்படி மதுரையில் 8 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. கட்டாயக் கல்வி சட்டப்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை மாணவ, மாணவியர் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அந்த சட்டப்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

ஆனால், அச்சட்டப்படியான மாணவர் சேர்க்கை 66 சதவீதம் நடந்து முடிந்துள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து  அவர்கள் மேலும் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 155 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 2491 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட வேண்டும். தற்போது வரை 1650 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


 மாணவர் சேர்க்கைக்கு ஜூன் மாத இறுதி வரை கால அவகாசம் உள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை, 19 பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடந்துள்ளது. 102 பள்ளிகளில் பாதியளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டப்படியான மாணவர் சேர்க்கையே நடைபெறவில்லை. ஆகவே அப்பள்ளி நிர்வாகத் தரப்பினருக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. ஆகவே நடப்பாண்டில், மதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி முழுமையான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.