Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 8, 2016

    4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்

    ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, திருக்கானுார், வாழப்பாடியார் நகரில் உள்ள, உஷா லட்சுமணன் கல்வியல் கல்லுாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:


    கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் வகையில், 1999  - 2000ல் எங்கள் கல்லுாரி துவங்கப்பட்டது. 2004  - 05ல் பி.எட்., படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளையும், புதுச்சேரி பல்கலையின் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம்.

    இந்நிலையில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என்ற புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க, அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக் கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும் விண்ணப்பித்தோம்; எந்த பதிலும் இல்லை.

    எனவே, ஒருங்கிணைந்த பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும்; நிரந்தர இணைப்பு வழங்கும்படி, புதுச்சேரி பல்கலைக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், மனுதாரரான கல்லுாரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, ஜூன், 8க்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.

    No comments: