Pages

Monday, June 20, 2016

தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு

இலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் பள்ளிகள் வேறு வழியின்றி, இலவச சேர்க்கை மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன.


மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தை, 5 முதல், 14 வயது வரையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவச கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே செலுத்தும்.

சேர்க்கை:ஆனால், தமிழகத்தில் இந்த சட்டம், 5முதல், 14 வயது வரைஉள்ள அனைத்து மாணவர் களுக்கு என இல்லாமல், வெறும் எல்.கே.ஜி., வகுப்புக்கு மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. தனியார் பள்ளிகளில், அரசின் உத்தரவுப் படி, கடந்த மே, 31ம் தேதி வரை மனுக்கள் பெறப் பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இதில் பல பள்ளிகள், இலவச மாணவர் சேர்க்கையிலும், நன்கொடையும், கல்வி கட்டணமு ம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, தமிழக அரசு, 2014ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணத் தொ கையில், 20 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள தாக கூறப்படுகிறது. 2015 - 16ம் கல்வி ஆண்டில், 130 கோடி ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு, பாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால், கடனில் தவிக்கும் பள்ளிகள், மாணவர் களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிதி அளித்தால், மாணவர்களிடம் பணத்தைதிருப்பி அளித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளன.இது குறித்து, தமிழக கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும், அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் தான், இந்த நிதியை தர வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், தாமதம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.

தீர்மானம்
இதற்கிடையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க கூட்டம், அதன் பொது செய லர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில், தமிழக அரசு பாக்கி வைத்துள்ள, 150 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும்; தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கையில் சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.