Pages

Wednesday, June 22, 2016

10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழியர் அசத்தல்

பிளஸ் 2 முடித்து, 10 ஆண்டுகளுக்கு பின், ஐ.டி., பணியாளர் ஒருவர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் சிவராஜ், 28; 10 ஆண்டுகளுக்கு முன், பிளஸ் 2 படித்தவர். மருத்துவ படிப்பில் சேராமல், இன்ஜியரிங் முடித்தார். பின், சென்னை யில் உள்ள, ஐ.டி., எனப்படும் தகவல்
தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். திடீரென இவருக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க ஆர்வம் வந்தது.


இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க விண்ணப்பித்தார். தரவரிசை பட்டியலில், 199.25 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற இவருக்கு, 95வது இடம் கிடைத்தது. நேற்று, பொது பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடத்தை தேர்வு செய்தார்.''பத்து ஆண்டுகளுக்கு பின், எம்.பி.பி.எஸ்., சேரும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது; இன்னொரு துறையில் பயணிக்க போகிறேன்; நன்கு படித்து, உயரிய மருத்துவ சேவையில் என்னையும் இணைத்துக் கொள்வேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.