Pages

Friday, June 10, 2016

பாட புத்தகம் இல்லை; பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில், ஜூன், 1ம் தேதி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்றே, மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை; தனியார் பள்ளிகளுக்கும் கிடைக்கவில்லை. 


அதனால், கடைகளுக்கு சென்று புத்தகங்கள் வாங்கி வருமாறு, பிளஸ் 1 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், எந்த இடத்திலும் புத்தகம் கிடைக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஜூன், 15 முதல் புத்தகங்கள் வினியோகம் செய்ய, பள்ளிக்கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் செயல்படும் அரசு கேபிள், டிவி நிறுவன இ - சேவை மையங்களில், ஜூன், 15க்கு பின் புத்தகம், ஆர்டர் செய்து வாங்கலாம். சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் பிளஸ் 1 புத்தகம் விற்க, இரண்டு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும்&' என, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.