நாமக்கல் மாவட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தனர். 'பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை, 10:32 மணிக்கு வெளியிடப்படும்' என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்தது. அதை தொடர்ந்து, பத்திரிகையாளர்கள், வழக்கம் போல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்தனர்.
ஆனால், கலெக்டர் தட்சிணாமூர்த்தி, சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரியில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக சென்று விட்டார்.
அதனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை தொடர்பு கொண்ட கலெக் டர், 'ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து, தேர்வு முடிவுகளை வெளியிடலாம்' எனக்கூறி, சி.இ.ஓ.,வை அழைத்துள்ளார்.
இதையடுத்து, அவரும், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லுாரிக்கு சென்றபின், மதியம், 12:30 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
மற்ற மாவட்டங்களில் குறித்த நேரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு மணி நேரம் தாமதமாக
வெளியிடப்பட்டதால், மாணவ, மாணவியர், பெற்றோர், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் என, பல்வேறு தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.