தாராபுரத்தில் நேற்று நடந்த, பள்ளி வாகனங்களுக்கான சோதனை முகாமில், தகுதியற்ற நிலையில் இருந்த, 21 வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தாராபுரம் வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக, தாராபுரம், மூலனூர் சுற்றுப்பகுதியில் உள்ள, பள்ளி வாகனங்களுக்கான தகுதி தணிக்கை சோதனை முகாம் நேற்று நடந்தது. மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடந்த இம்முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
மொத்தம், 74 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 21 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதியுள்ள, 53 வாகனங்களுக்கு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது. பள்ளி வாகன சோதனை பணியை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார். தேர்தல் பார்வையாளர் நித்யானந்த மண்டல், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.