Pages

Friday, May 27, 2016

இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால், பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் ஆக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசு கடந்த 2012,13 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியுள்ளது.


2014, 15ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கவில்லை. இதனால் பி.எட்., படித்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டிலாவது டி.இ.டி., தேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில்,“ பி.எட்., முடித்த ஆயிரக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் ஜெ.,க்கு கடிதம் அனுப்பிஉள்ளோம்,” என்றார்.

2 comments:

  1. உச்சநீதிமன்றம் TET வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தேர்வு நடத்தமுடியும்

    ReplyDelete
  2. otherwise take eployment seniority

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.