பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
'ஆன்ட்ராய்டு' அலைபேசிகளில் இந்த 'ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால்' செய்து, அந்த அலை பேசியை பள்ளி வாகனங்களில் பொருத்த வேண்டும். இந்த அலைபேசியிலிருந்து பெற்றோர்களின் அலைபேசிக்கு மாணவர் பேருந்தில் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறார், ஒரு நிறுத்தத்தில் எத்தனை மாணவர்கள் இறங்குகின்றனர் போன்ற அனைத்து தகவல்களும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.