தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2016 - 17ம் கல்வியாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது. பல்கலை துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்.
மொத்தம், 2,600 இடங்களுக்கு அரசு விதித்த விகிதாச்சாரப்படி, 65சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியார் கல்லுாரிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மே, 12ம் தேதி முதல் ஜூன், 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், ஜூன், 20ல் வெளியிடப்படும். சிறப்பு, ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு ஜூன், 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 4 முதல், 10ம் தேதி வரையும், தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை, 13ம் தேதியும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15, 16ம் தேதிகளும் நடக்கிறது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 25 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. தேவைப்பட்டால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். சேர்க்கை தேதிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. அரசு மட்டுமின்றி, தனியார் இடஒதுக்கீடுக்கும் விண்ணப்பம் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், திருநங்கைகளுக்கும் தனி இடஒதுக்கீடு உள்ளது. இதர பிரிவினர், 600 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 300 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி கூறினார். மாணவர்கள், www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 0422 6611345/46 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.