Pages

Monday, May 2, 2016

கனிவு காட்டும் கருவூல அலுவலகங்கள்: புதிய உத்திகளால் ஓய்வூதியர்கள் நிம்மதி

கடுமை காட்டி வந்த கருவூல அலுவலகங்கள் பல மாவட்டங்களில் கனிவு காட்டி வருகின்றன. இதனால், ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும் நிம்மதி அடைந்துள்ளனர். கருவூல அலுவலகங்களின் புதிய உத்திகளால் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் எளிதாக அவர்களது பணிகளை முடித்துச் செல்ல முடிவதாக தெரிவித்தனர்.

அரசு அல்லது ஆசிரியர் பணியில் பணியாற்றும் வரை அவர்களுக்கான ஊதியம், பிடித்தம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அவர்களது வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்து விடும். அதுவரை அரசு அலுவலங்களில் மக்களைச் சந்தித்து வந்த அதிகாரிகள் - அலுவலர்கள், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற அவர்கள் அரசின் கருவூல அலுவலகங்களுக்குச் செல்லும் நிலை ஏற்படும். அப்போதுதான், அவர்கள் அரசு அலுவலர்களின் கடுமையான நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வர்.

அந்த வகையில், கருவூல அலுவலகங்கள் என்றால் ஓய்வூதியம் - குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கனிவாகவும், பணிவாகவும் நடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது, அவை மெல்ல மெல்ல மாறி வருகிறது. சில மாவட்டங்களில் புதிய உத்தி: சில மாவட்டங்களில் உள்ள கருவூல அலுவலகங்கள் புதிய உத்திகளால் ஓய்வூதியதாரர்களை ஈர்த்துள்ளனர். இதனால், அவர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்தில் பல புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, ஓய்வூதியதாரரான சுசிலா கூறுகையில், ஆண்டுதோறும் ஓய்வூதியர்கள் தங்களின் வாழ்நாள் சான்றினை ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் நேரில் வந்து அளிக்க வேண்டும். இந்த நேர்காணலில் வரும் ஓய்வூதியர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. ஓய்வூதியர்களுக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டு தேவையான அளவு பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓய்வூதியர்கள் நிற்க வேண்டியதில்லை

நேர்காணலின்போது ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒருமுறை கருவூல அலுவலர் ஓய்வூதியர்களிடம் உரையாற்றுகிறார். செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து தெரிவிக்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணின்படி நேர்காணல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக 5 நிமிஷங்களில் நேர்காணல் முடிந்து விடுகிறது. வயதான ஓய்வூதியர்களின் பயன்பாட்டுக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

குறைகளைத் தெரிவிக்கலாம்: ஓய்வூதியர்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காக எளிமைப்படுத்தப்பட்ட படிவம் (ள்ண்ம்ல்ப்ண்ச்ண்ங்க் ச்ர்ழ்ம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் அளிக்கும் விண்ணப்பத்துக்கு உடனடியாக ஒப்புதல் (ஹஸ்ரீந்ய்ர்ஜ்ப்ங்க்ஞ்ம்ங்ய்ற்) அளிக்கப்படுகிறது.

ஓய்வூதியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் - பிடித்தம் குறித்த விவரங்கள் பிற்பகல் 3 மணி முதல் ஓய்வூதியர்களின் ஓய்வூதிய புத்தகத்தில் பதிவு செய்து தரப்படுகின்றன. ஓய்வூதியர்களுக்கு ஆதார் அட்டை வழங்க மாவட்ட அலுவலகத்திலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மற்ற மாவட்டங்களிலும் பின்பற்றப்பட தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.