இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ம் ஆண்டுக்குள் இயக்கப்படும். இதற்கான பணிகள் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு முறையாக நடந்து வருகிறது. இத்திட்டம் இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை-ஆமதாபாத் இடையே 508 கி.மீ., நீளத்தில் அமையவுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் அமையவுள்ள இந்த புல்லட் ரயில், குறிப்பிட்ட தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையும். இதன் திட்டமதிப்பு ரூ.97,636 கோடி. மொத்த மதிப்பில் 81 சதவீதத்தை ஜப்பான் லோனாக வழங்கவுள்ளது.
மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில், கடலுக்கடியில் 21 கி.மீ., நீளத்திற்கு சுரங்க ரயில் பாதையும் அமையவுள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு த்ரில்லான அனுபவத்தை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.