Pages

Saturday, May 7, 2016

2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி,தோல்வியை தீர்மானிக்க போவது யார்?

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் பேர் -2016 ல் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இதில் (உச்சகட்டமாக 80% வாக்குப்பதிவு நிகழ்ந்தால்4.5 கோடி வாக்குகள். ) ஆனால் இதுவரை கடந்த கால வரலாறுகளில் அதிகபட்சமாக 70% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. 70% என வைத்துக் கொண்டால் 3கோடியே 96 லட்சம் பேர் வாக்குகளை பதிவாகும் .


இதில் இரண்டு பெரிய திராவிட கட்சி ஓட்டுகள் அ.இ.அ.தி.மு.க.1 கோடியே 20 லட்சம் ஓட்டுக்கள், தி.மு.க. விற்கு 80-90 லட்ச ஓட்டுகள்.
இவற்றை கழித்துவிட்டால் மீதம் 2 கோடி வாக்குகள் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.

🌹🌹இதில் நடுநிலையாளர்கள்,புதிய வாக்காளர்கள் என 1கோடியே 15 லட்சம் ஓட்டுகள் இந்த கூட்டணிக்கோ அல்லது பிற கூட்டணிக்கு பிரியும்.
இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கென்ன?

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 லட்சம் பணி புரிகின்றனர். ஓய்வு பெற்றோர் 6 லட்சம் பேர் உள்ளனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் தொகுப்பூதியம் மற்றும் பகுதிநேர பணியாளர்கள் 2 லட்சம் இவற்றை எல்லாம் சேர்த்து குறைந்த பட்சம் 20 லட்சம் பேர் உள்ளனர்.

🌹🌹இவர்களை தவிர்த்து ஒரு குடும்பத்திற்கு  குறைந்த பட்சம் 4 ஓட்டுக்கள் என வைத்துக் கொண்டால்... 20×4=80 லட்சம் ஓட்டுக்கள்.
அரசு ஊழியர் & ஆசிரியர்கள் 20 லட்சம் + குடும்ப ஓட்டுகள் 80 லட்சம்= 1 கோடி ஓட்டுக்கள்.

🌹🌹வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க இவர்கள் யார் பக்கம் ஓட்டுகளை மொத்தமாக பதிவுசெய்கிறார்களோ அவரேவெற்றி பெற முடியும்.
"யானைக்கு தன்பலம் என்னவென்று அறியாமல் பாகனின் ஒரு சிறு குச்சிக்கு அடங்கியுள்ளதோ அதுபோல் நாமும் நம் பலம் அறியாமல்  இதுவரை இருந்து வருகின்றோம்.

🌹🌹கடந்த 10 ஆண்டு வரலாற்றை புரட்டிப் பார்த்தால்...
நம் பலத்தை நாம் அரசுக்கு உணர்தாததால் நம் ஒட்டுமொத்த எதிர்கால வாழ்வை சீரழிக்கும் CPS திட்டத்தை மத்தியரசு அமுல் படுத்துவதற்கு முன்னரே( ஓராண்டிற்கு முன்னரே) அமுல் படுத்தியது அப்போதைய அரசு.

 நியாயமான எந்த ஒரு போராட்டத்தையும் 20 ஆண்டுகளாக இருந்த அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.போராட்ட களத்தின் பேச்சுவார்த்தையின் போது
நீங்கள் உங்கள் ஓட்டுக்களையும் பதிவிட மாட்டீர்கள்.உங்களது குடும்ப ஓட்டுக்களையும் பதிவாக்காமல் வீட்டிலேயே முடங்கி கொண்டிருக்கிறீர்கள்.உங்களால் இந்த அரசிற்கு எந்த பலனுமில்லை.
ஆகவே உங்களது ஓட்டுக்கள் எங்களுக்கு தேவையில்லை என ஆண்ட மற்றும் ஆளுகின்ற அரசும் புறகணிக்கின்றனர்.
அதனாலயே கடந்த சில காலங்களில்  எந்த ஒரு பாதிப்பையும் சரி செய்ய முடியவில்லை.

🌹🌹நம் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க நம் ஒரு ஓட்டையும் கூட இம்முறை வீணடிக்க கூடாது.இந்த தேர்தலில் நம் ஒட்டுமொத்தமாக ஓரணியில் சாய்ந்தால் நிச்சயமாக அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் .ஆட்சி அமைக்க 2 கோடி ஓட்டுக்கள் தேவை நம்முடைய ஓட்டுகளை முழுவதும் பதிவுசெய்தால் அந்த கட்சியே ஆட்சியில் அமரமுடியும்.....                      ஊழல் அற்ற,ஏழைகளின் வாழ்வை முன்னேற்றுகின்ற , தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்ற ,கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்ற ,நல்ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது தமிழகத்தின் தலைவிதி நம்கையில் உள்ளது.....                             நாம் இத்தேர்தலில்  ஒன்றுபட்டு தபால் வாக்குகளையும், நம் குடும்ப வாக்குகளையும் 100% பதிவு செய்து நம் ஜனநாயக கடமை நிறைவேற்றும் பொழுது அது நம் தலைமுறையை மாற்றும்.

🌹🌹100% ஓட்டளியுங்கள். உண்மையான நன்மை செய்கின்ற ஓரணிக்கு ஓட்டளியுங்கள்!!
 உரிமையை வென்று காட்டுவோம்!!
இப்பதிவை ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பதிவிடுங்கள்.
 🌹நன்றி🌹
 SSTA பொதுச்செயலாளர்
ஜே.ராபர்ட்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.