Pages

Tuesday, May 17, 2016

பிளஸ்-2 தேர்வு முடிவுகள், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான பாடங்களில் 200/200 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.4 சதவிதம் ஆகும். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தியும், மாணவர் ஜஸ்வந்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளனர். 


மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண் விபரம்:- 

தமிழ் - 199
ஆங்கிலம் -197
கணிதம் - 200 
இயற்பியல் - 199
வேதியல் - 200
உயிரியல் 200

மொத்தம் - 1195

மாணவர் ஜஸ்வந்த் மதிப்பெண் விபரம்:-

தமிழ் - 199
ஆங்கிலம் -197
கணிதம் - 200 
இயற்பியல் - 199
வேதியல் - 200
உயிரியல் 200

மொத்தம் - 1195

திருவள்ளூரை சேர்ந்த ஸ்ரீநிக்கேதன் பள்ளி மாணவி பவித்ரா 194 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வேணு ப்ரீத்தா 1193 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளார்.

இயற்பியல் 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில் பெரும்பாலான பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது.

இயற்பியல் பாடத்தில் 5 மாணவர்கள் மட்டுமே 200/200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

கணித பாடத்தில் 3361 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். 

விலங்கியலில் மொத்தம் 10 மாணவர்கள் மட்டுமே 200/200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். 

வணிகவியலில் 3084 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். 

வணிக கணிதத்தில் 1072 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.