Pages

Thursday, May 19, 2016

அதிமுகவுக்கு வெற்றி தேடித்தந்த 11 சதவீத ஓட்டு: தேய்ந்தது தேமுதிக

இந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கும், அடுத்த இடத்தில் வந்த திமுகவுக்கும் இடையே இருந்த சுமார் 11 சதவீத ஓட்டுகள் தான், வெற்றியை தீர்மானி்த்துள்ளன. 11 மணி அளவில் கிடைத்த தகவலின்படி, அதிமுகவுக்கு 41.8 சதவீத ஓட்டுகளும், திமுகவுக்கு 30.9 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இந்த ஓட்டு வித்தியாசமே அதிமுகவுக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளது.


திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரசிற்கு 6.4 சதவீத ஓட்டுகளும், பாமகவுக்கு 5.3 சதவீத ஓட்டுகளும், பாஜவுக்கு 2.4 சதவீத ஓட்டுகளும் தேமுதிகவுக்கு 2.3 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

ஆக, அதிமுகவுக்கு எதிராக திமுகவுடன் பாமக, பாஜ., தேமுதிக ஆகிய கட்சிகள் சேர்ந்தால் 9.7 சதவீத ஓட்டுகள் மட்டுமே அதிகமாக கிடைக்கும். இதுவும் கூட, அதிமுகவை தோற்கடிக்க போதாது. 

இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் அதிமுக இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக இருப்பது தெளிவாகிறது.

இதில் மிகவும் சோகமான செய்தி தேமுதிகவுக்கு தான். ஆரம்பிக்கப்பட்ட புதிதில் அக்கட்சிக்கு 15 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைத்தன. அது, தேய்ந்து, தேய்ந்து சென்ற தேர்தலில் சுமார் 6 சதவீதம் ஆனது. அதுவும், தற்போது தேய்ந்து 2.3 சதவீதத்தில் வந்து நிற்கிறது.

எதிர்காலத்தில் தேமுதிக ஒரு முக்கிய சக்தியாக இருக்காது என்பதையே இது காட்டுகிறது. இனிமேல் மற்ற கட்சிகளுடன் சீட்டுக்கு பேரம் பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.