உங்கள் வருமானத்தின் ஒரு பகுதி சேமிப்பாக இருக்க வேண்டும். ஆனால், செலவுகள் அதிகரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்கலாம். இதற்காக சேமிப்பே சாத்தியமில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்தாலே போதுமானது. அதாவது சேமிக்க கூடிய வருமானத்தை அதிகரிக்கும் வழிகளை கண்டறிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வருமானம்? வருமானத்தில் மொத்த வருமானம், கைக்கு வரும் வருமானம் என இருப்பது போல, மாத செலவுகள் போக மிஞ்சும் வருமானம் தான் சேமிக்க கூடிய வருமானம். இது தான் சேமிப்பாக மாறுகிறது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வருமானத்தை அதிகமாக்க வேண்டும். இதற்கு செலவுகளை குறைக்க வேண்டும். செலவுகளை குறைக்க வழிகளை கண்டறிய முடிந்தால் இப்போதைய ஊதியத்திலேயே சேமிப்பது சாத்தியமாகும்.
வரிகள் பலவிதம்வருமான வரி, சொத்து வரி, சேவை வரி என பலவிதமான வரிகளை நாம் செலுத்த வேண்டியிருக்கிறது. இவை தவிர கலால் வரி, மூலதன ஆதாய வரி, வாட் வரி உள்ளிட்ட வரி விதிப்புகளும் இருக்கின்றன. இவற்றில் ஒரு சில வரிகள் பரவலாக அறியப்படாமல் இருப்பதோடு, எந்த வரி எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதும் புரியாமல் இருக்கலாம். மேலும் வரி வசூலிக்கும் அமைப்பு தொடர்பான குழப்பமும் இருக்கலாம். இந்தியாவில் செலுத்தப்பட வேண்டிய வரிகள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி ஒரு பார்வை;
இரு வகை வரிகள்பொதுவாக வரிகள் இரண்டு வகைப்படும். நேரடி வரி மற்றும் மறைமுக வரி என இவை குறிப்பிடப்படுகின்றன. நேரடியாக அரசு அல்லது அரசு அமைப்புக்கு செலுத்தப்படும் வரி நேரடி வரி என குறிப்பிடப்படுகிறது. வருமான வரி இதற்கான உதாரணம். வரி செலுத்துபவரை அதிகம் பாதிப்பதும் நேரடி வரி தான். உற்பத்தியாளர்கள் அல்லது இடைப்பட்ட அமைப்புகள் மூலம் அரசால் வசூலிகப்படும் வரிகள் மறைமுக வரிகள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த வரிகள் நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்டு அரசுக்கு செலுத்தப்படுகின்றன். சேவை வரி இதற்கான உதாரணம். ஏ.சி., ரெஸ்டாரண்ட் போன்றவற்றில் பெறப்படும் சேவை வரி அரசுக்கு செலுத்தப்படுகிறது.
முக்கிய வரிகள்வருமான வரி; தனிநபர் அல்லது வர்த்தக நிறுவனங்கள் வருமானம் மீது செலுத்தும் வரி.வருமான வரிக்கான வருமானம் ஐந்து வகையான பிரிக்கப்படுகிறது; ஊதியம், வீட்டு வாடகை, வர்த்தக வருமானம், மூலதன ஆதாயம் மற்றும் வைப்பு நிதி வட்டி போன்ற இதர வருமானம்.வாட் வரி: மாநிலத்தில் விற்கப்படும் பொருட்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி.சேவை வரி: 1994 முதல் சேவைகள் மீது விதிக்கப்படும் வரி. கலால் வரி: உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி.சுங்க வரி: இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிதொழில்முறை வரி: ஊழியர், ஒரு சில தொழில் வல்லுனர்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி. மூலதன ஆதாய வரி: சொத்து, வாகனம், நகைகள், நிலம், பத்திரங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் போது அதன் ஆதாயம் மீது விதிக்கப்படும் வரி.பொழுதுபோக்கு வரி: சினிமா மற்றும் இதர பொழுதுபோக்கு டிக்கெட்கள் மீது விதிக்கப்படும் வரி.முத்திரை தாள் கட்டணம்: பத்திர பதிவு போன்றவற்றின் போது செலுத்தப்படுவது. சொத்து வரி: உள்ளாட்சி அமைப்பால் ஆண்டுதோறும் வீட்டு உரிமையாளரிடம் இருந்து பெறப்படுவது.
மத்திய, மாநில வரிகள்இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் பொதுவாக மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகின்றன. ஒரு சில வரிகள் நேரடியாக மத்திய அரசுக்கு செல்கின்றன. சில வரிகள் மாநில அரசுக்கு செல்கின்றன. மத்திய அரசு வரிகள்: வருமான வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி.மாநில அரசு வரிகள்:விற்பனை வரி, வாட், பொழுதுபோக்கு வரி, டோல் கட்டணம், தொழில்முறை வரி, முத்திரைத்தாள் கட்டணம், ஆடம்பர வரி, ஆக்டிராய் வரி, மூலதன ஆதாய வரி.உள்ளாட்சி அமைப்பு வரிகள்: சொத்து வரி.
இதர வரிகள்இவை தவிர ஈவுத்தொகை வினியோக வரி, டோல் கட்டணம், ஆடம்பர வரி, ஆக்டிராய் வரி உள்ளிட்டவையும் பொருத்தமான இடங்களில் வசூலிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.